யாழில் தவறான முடிவினால் இரு இளைஞர்கள் உயிரிழப்பு
யாழ். சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பகுதியில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.
யாழ். சாவகச்சேரி டச்சு வீதி, கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (27.03.2023) பதிவாகியுள்ளது.
யாழ்.சாவகச்சேரி தபால்கந்தோர் வீதியைச் சேர்ந்த கு.மயூரன் (23.07.2023) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வடக்கு பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் காதல் தோல்வியால் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
