கிளிநொச்சியில் 23 கிலோகிராம் கஞ்சா மீட்பு- தீவிரப்படுத்தப்படும் விசாரணை
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் பகுதியில் 23 கிலோகிராமுக்கு அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(12.02.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா மீட்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பளை இராணுவ அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாசார் சோரன்பற்று காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிலோ 550 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பளை பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


