22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் : ஆராய உயர்நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு நியமனம்
நீதிபதிகளின் ஓய்வுக்கான வயதெல்லையை அதிகரிக்கும் நோக்குடன் முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் பரிசீலிப்பதற்கும், சட்டநடைமுறைகள் தொடர்பில் சபாநாயகருக்கு விளக்கமளிப்பதற்கும் குறித்த ஐவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர்
பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவில் நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, அசல வெங்கப்புலி, சம்பத் அபேகோன், கிஹான் குலதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

22ஆவது அரசியல் திருத்தம் தொடர்பான மனுக்களை பரிசீலித்து எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னதாக அவர்கள் தங்கள் தீர்ப்பை அறிவிக்கவுள்ளனனர்.
பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: காவல்துறைக்கு ஆதரவாக களமிறங்கும் ராணுவம் News Lankasri
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan