22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் உள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
26ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்வுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் சட்டமூலத்தை அன்றைய தினம் முன்வைப்பதா இல்லையா என்பது சபாநாயகரின் முடிவு என அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம்
கடந்த 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 07 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதற்கான நெருங்கிய நாள் எதிர்வரும் 26ஆம் திகதியாகும் என நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் சமிந்த குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |