22ம் திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆச்சரியப்படவில்லை
22 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றதினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் ஆச்சரியம் அடையவில்லை என முன்னாள் ஆளுநரும் ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பின் உறுப்பினருமான கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் போது அரசாங்கம் மேற்கொண்ட தலையீடுகள் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் ஆச்சரியப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பானது நீதிமன்ற அதிகாரம் தொடர்பில் வலுவான வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் 18 மற்றும் 20ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காலங்களில் நாடாளுமன்றை முற்றுகையிட்டு மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த மக்களின் எதிர்ப்பு காரணமாக பின்னர் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கங்கள் குறித்த திருத்தச் சட்டங்களை ரத்து செய்யவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு கட்சி பேதம் பாராட்டாது அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இந்த 22 ஆம் சட்ட மூலம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டது என நீதிமன்றம் கூறினாலும் இதில் ஜனநாயக விரோத உள்ளடக்கங்கள் காணப்படுவதாகவும் இதனால் இந்த சட்ட திருத்தத்தை எதிர்ப்பதாகவும் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.