22 ஆவது திருத்தத்தை எங்கள் ஆட்சியின் கீழ் முற்றிலுமாக நீக்குவோம்: சஜித் சூளுரை
ஜனநாயகத்துக்கு விரோதமான அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசின் கீழ் முற்றிலுமாக நீக்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சூளுரைத்தார்.
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று(24.9.2026) காலை பத்தரமுல்ல - பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், "அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்து, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை இல்லாதொழிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
22ஆவது திருத்தம்
தற்போதைய அரசு நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. அதிக பொய்களைக் கூறிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்கவைக் குறிப்பிடலாம்.

இந்த 22ஆவது திருத்தத்தின் மூலம் முழு நாட்டையும் பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தின் தனிக்கட்சி ஆட்சிக்கு உட்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த ஜனநாயகத்துக்கு எதிரான மக்கள் விரோத செயற்பாடுகளை மக்கள் பலத்தினாலும் சக்தியினாலும் தோற்கடிக்க வேண்டும்.
அழைப்பு
ஜனநாயகத்தை நாசம் செய்யும் தற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்புவோம். நாட்டின் முன்னேற்றம், மக்களின் சுபீட்சம் மற்றும் நலனுக்காக ஒன்றிணையக்கூடிய சகல ஜனநாயக மற்றும் தூய்மையான சக்திகளுடனும் ஐக்கிய மக்கள் சக்தி கைகோர்க்கும். இந்த நாட்டு மக்களுக்குள்ள ஒரே மாற்று வழியும் மாற்று அரசும் ஐக்கிய மக்கள் சக்தியே.

வறுமையை முழுமையாக இல்லாதொழித்து, சகல வர்க்க மக்களையும் பாதுகாத்து, ஒட்டுமொத்த 220 இலட்சம் மக்களையும் வாழவைக்கக்கூடிய புதியதொரு யுகத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளா்.
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri