நாட்டு மக்களிடம் ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்துள்ள கோரிக்கை
இந்த நாட்டை வீணடித்த, நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,'' நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் பல கள்வர்கள் உள்ளனர். இந்த நாட்டில் ஊழல்வாதிகள் இவ்வாறான கள்வர்களை பாதுகாக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மணல்கொள்ளையர்கள், கப்பம் பெறுவோர் தரமற்ற மருந்து இறக்குமதி செய்பவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.

தேர்தல்
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெற்றால் நெருக்கடி ஏற்படும். எனவே பெரும்பாலும் விரைவில் பொதுத்தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும் நாட்டின் வரலாற்றில் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் உள்ளார்.
இந்த நாட்டில் சட்டம் நடைமுறைப்படுத்துவதாகவே இதனை கருத வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri