22 வருடங்களாக சாரதியாக பணியாற்றும் நபருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
அனுராதபுரத்தில் பஸ் சாரதி ஒருவருக்கு பயணிகளால் மேற்கொள்ளப்பட்ட நெகிழ்ச்சியான அனுபவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ஹொரோவ்பதான பிரதேசத்தில் 22 வருடங்களாக ஒரே பேருந்தில் பணிபுரிந்த சாரதி ஒருவருக்கு அந்த பேருந்தில் பயணித்த பயணிகளால் நெகிழ்ச்சி செயல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான படிகாரமடுவயிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேருந்தில் பணிபுரியும் குறித்த சாரதிக்கு இன்றைய பிறந்தநாள் என்பதனால் அவரை பயணிகள் நெகிழ வைத்துள்ளனர்.
பயணிகளின் செயல்
அவரது பிறந்தநாளை முன்னிட்டு பேருந்தில் பயணித்த பயணிகள் அவருக்கு பேருந்தில் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாரதியின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.






ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
