பகிடிவதை காணொளி விவகாரம் : 22 மாணவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியில் பீட முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்த முறைப்பாட்டையடுத்து, கடந்த 19ஆம் திகதியில் இருந்து அதே பீடத்தைச் சோந்த 2ஆம், 3ம் வருட மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடைவிதித்துள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஜ நவ்பர் தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவர்களை பகிடிவதை செய்யும் காணொளி காட்சி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
உண்மையை கண்டறியும் குழு
இது குறித்திது பல்கலைக்கழக பதிவாளர் தெரிவிக்கையில், இந்த பகிடிவதை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம் பெற்றுள்ளதாகவும் கடந்த 19ஆம் திகதியே இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் அதுவரைக்கும் இது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.
இருந்தபோதும் முறைப்பாடு கிடைத்தவுடன் இது தொடர்பில் உண்மையை கண்டறியும் குழு நியமிக்கப்பட்டு குறித்த காணொளியில் இருக்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டனர்.
அதற்கிணங்க குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொறியல் பீட 2ஆம், 3ஆம் ஆண்டு மாணவர்கள் 22 பேரை கடந்த 19ஆம் திகதியில் இருந்து பல்கலைக்கழக்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸாரும் விசாரணை நடாத்தி வருவதாக அவர் மேலும் குறி்ப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




