வாகன சாரதி உரிமங்களை அச்சிடுவதன் மூலம் கடந்த நான்கு மாத காலத்திற்குள் அரசாங்கத்திற்கு 219 மில்லியன் வருமானம்
2021, ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இலங்கை இராணுவம், வாகன சாரதி உரிமங்களை(லைசென்ஸ்) அச்சிடுவதன் காரணமாகக் கடந்த நான்கு மாத காலத்திற்குள் அரசாங்கத்திற்கு 219 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது.
ஏப்ரல் 30 ஆம் திகதி வரை 29,982 ஓட்டுநர் உரிமங்களைத் தாம் அச்சிட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவம் அதன் அச்சிடும் பணியை ஆரம்பித்தமையை தொடர்ந்து சாரதி உரிமத்தில் பல புதிய அம்சங்களைச் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒவ்வொரு சாரதி உரிமத்துடனும் ஒரு குறியீடு அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் தொடர்பான பல முறைகேடுகளைத் தடுப்பது இதன் நோக்கமாகும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஓட்டுநர் உரிமங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் மென்பொருளை ஒரு தென்னாப்பிரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ளது, எனவே இதற்கு அதிக பணம் செலவாகிறது.
எனவே, எதிர்காலத்தில் இந்த நோக்கத்திற்காகப் பொருத்தமான மென்பொருளை
உருவாக்கப்படும் என்று இராணுவம் அறிவித்துள்ளது.
