நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தம் - உயர் நீதிமன்றத்தில் குவிந்த 21 மனுக்கள்
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வெளிப்படைத்தன்மை அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜயசுந்தர, சட்டத்தரணி அஜந்தா பெரேரா, சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க, இளம் சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்டவர்களே இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் கோரிக்கை
அத்துடன், முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பேராசிரியர் ரஞ்சன் அபேரத்ன மற்றும் பிறர் இந்த மசோதாவை எதிர்த்து மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த மசோதாவானது, மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கிறது என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவதாயின், அது ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
36 வருடங்களுக்கு முன் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் - காணிகளை விடுவிக்குமாறு கோரி தமிழர் பகுதியில் தொடர் போராட்டம்
YOU MAY LIKE THIS VIDEO
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening