36 வருடங்களுக்கு முன் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் - காணிகளை விடுவிக்குமாறு கோரி தமிழர் பகுதியில் தொடர் போராட்டம்
இலங்கை அரசாங்கத்தினுடைய இராணுவ இயந்திரத்தினால் இந்த இடத்தில் இருந்த மக்கள் மிக மோசமான முறையில் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(23) யாழில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
துரத்தியடிக்கப்பட்ட மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இங்கிருந்து மோசமான முறையில் துரத்தியடிக்கப்பட்ட மக்கள் 36 வருடங்களாக தமது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்தப் போராட்டமானது மயிலிட்டி, வசாவிளான், பலாலி மற்றும் தெல்லிப்பளை போன்ற இடங்களிலும் நடைபெற்று வருகின்றது.
முந்தைய அரசாங்கங்கள் போன்று இவர்களும் நடந்துகொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருவார்கள் என இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.