ஹன்சமாலி உள்ளிட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டவுள்ளனர்!
கொழும்பின் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் சந்திமல் ஜெயசிங்க மற்றும் பியாமி ஹன்சமாலி உட்பட்ட 21 பேர், நீதிமன்றம் தம்மை பிணையில் செல்ல அனுமதித்ததன் பின்னர் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளனர்.
பதுளை - பசறையில் உள்ள அரச மையத்தில் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள அவர்கள் நாளை விடுவிக்கப்படவுள்ளனர்.
பயணத்தடையின் போது கொழும்பு ஷங்கிரிலா விருந்தகத்தில் நிகழ்வு ஒன்றை நடத்தியமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் பின்னர் அவர்கள் பசறையின் தனிமைப்படுத்தல் மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இதேவேளை தாம் கைது செய்யப்பட்டதன் பின்னர் பலர் பயணத்தடையை மீறிய
குற்றச்சாட்டுக்கு உள்ளானபோதும் நீதிமன்ற பிணையின் பின்னர் அவர்கள்
வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டமையையும் சந்திமலும், பியாமியும்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam