2027 வரவு செலவுத்திட்டம்! இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்றைய தினத்திற்கான (20.11.2026) நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் இடம்பெறவுள்ளது.
அதேநேரம் 2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்
நிதி அமைச்சராக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா (Appropriation Bill) மீதான குழு நிலை விவாதம், அதாவது மூன்றாம் வாசிப்பு, நாளை (21) தொடங்கவுள்ளது.
இந்த விவாதம் டிசம்பர் 14 வரை, நான்கு சனிக்கிழமைகள் உட்பட மொத்தம் 19 அமர்வு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு, டிசம்பர் 14 அன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri