அரச நிதியில் மாயமான 72 சதவீத பணம்.. ரணில் தரப்பின் அதிர்ச்சி தகவல்
கடந்த ஆண்டின் மூலதன வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் இதுவரை 28 சதவீதமான நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும், "மிகவும் சவாலான பொருளாதாரப் பின்னணியிலேயே அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடுகள்
நாட்டில் வறுமை நிலை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது, சுமார் 6 மில்லியன் மக்களுக்கு ஒரு வேளைப் போசாக்கான உணவு கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதிலும், அவை முறையாகச் செலவிடப்படுவதில்லை.
குறிப்பாக, டித்வா மறுசீரமைப்புப் பணிகளுக்காக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், அதில் 8 சதவீதமான நிதியே இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் மூலதன வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் இதுவரை 28 சதவீதமான நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கப்பட்டாலும் அதனை மக்களின் நலனுக்காகச் செலவிடுவதற்குரிய வலுவான நிர்வாகக் கட்டமைப்பு இல்லாமையே தற்போதைய பிரதான பிரச்சினையாகும்.
டொலரின் பெறுமதி
மேலும், சுருங்கி வரும் பொருளாதாரச் சூழலிலேயே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, இவ்வாண்டில் 4.2 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பளித்த போது 292 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி, இன்று 46 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதனால் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு டொலருக்கு 45 ரூபா மேலதிகமாகச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.