2026ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறைகள்.. அரச அச்சுத் துறை வெளியிட்ட தகவல்
2026ஆம் ஆண்டு ஆரம்பமாக இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், அந்த ஆண்டிற்கான நாட்காட்டி அரச அச்சுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2026ஆம் ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகபட்ச விடுமுறை நாட்கள், அதாவது 4 விடுமுறை நாட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முக்கிய விடுமுறைகள்..
அதேவேளை, 2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகும்.

மேலும், வெசாக் பௌர்ணமி போயா தினம், மே 1ஆம் திகதியும், கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் வருகின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட அரச விடுமுறை நாட்கள் அஞ்சல், சுங்கம் மற்றும் வானிலை ஆய்வுத் துறைகளுக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது விடுமுறை நாட்களில் ஏற்படும் மாற்றங்கள் வர்த்தமானி அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும் என்று அரச அச்சுத் துறை தெரிவித்துள்ளது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam