ஆசிய நாடொன்றில் நேற்றிரவு பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தாய்வானின் வடகிழக்கு கடலோர நகரமான யிலானுக்கு (Yilan) அருகே இன்றிரவு இரவு, 7.0 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடலுக்கு அடியில் சுமார் 73 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், தலைநகர் தாய்பேயில் உள்ள உயரமான கட்டடங்கள் பலமாக குலுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தற்போது ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அந்நாட்டின் தேசிய தீயணைப்பு சேவை மற்றும் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை 6.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரே வாரத்தில் தாய்வானைத் தாக்கும் இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
இரண்டு புவித்தகடுகளின் சந்திப்பில் அமைந்துள்ள தாய்வானில், கடந்த 1999ஆம் ஆண்டு ஏற்பட்ட 7.3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri