அற்றார் அழிபசி தீர்த்தல் - 2026 தாயக உணவுக் கண்காட்சியும் கலை நிகழ்வும்
சைவத் தமிழ்ச் சங்கம் அருள்மிகு சிவன் கோவில், தாயகத்தில் யுத்தத்தாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வியினை ஊக்கப்படுத்தவும் பல்வேறுவிதமான வேலைத்திட்டத்தை கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கொண்டு வருகின்றது.
இம்மக்களுக்கான நிதியினை பெற்றுக் கொள்ளவும் முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை வர்க்கவுமென 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப் பெற்று சிறப்புடன் நடைபெற்று வந்தது.
தவிர்க்க முடியாத காரணத்தினால் இந் நிகழ்வு சில வருடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் 2016ம் ஆண்டு முதல் தாயக உணவுக் கண்காட்சியும் விற்பனையும் - தாயக இசை சங்கமம் - சுவிசின் முன்னணி கலை ஆசிரியர்களின் நடன நிகழ்வுகள் என சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்விற்கு வர்த்தக நிறுவனங்கள், தமிழ் ஊடகங்கள் தங்கள் ஆதரவை வழங்கிவருகின்றார்கள். Lankasri, Tamilwin, IBC Tamil பிரதான ஊடக அனுசரணை வழங்குகின்றனர்.
உணவு காட்சிப்படுத்தல்
பெருமளவான மக்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வில் 150 இற்கும் மேற்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் சிவன் ஆலயத்தின் பார்வதி அம்பாள் திருத்தொண்டர் சபையினர் இவ் உணவுகளை தயாரித்து வழங்குவதும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் இணைந்த பணியை எடுத்துக்காட்டி நிற்கின்றது.
சைவத் தமிழ்ச் சங்கம் தாயகத்தில் அறப்பணியை மேற்கொள்ளவென ஆரம்பித்த அன்பேசிவம் அறக்கட்டளை சிறப்பான முறையில் தனது சேவையினை ஆற்றிவருகின்றது. இவ் அறக்கட்டளையினால் முகமாலை சிவபுரவளாகத்தில் மூதாளர் இல்லம் அமைத்து 54 மூதாளர்களை பராமரித்து வருகின்றார்கள்.
பராமரிப்புத் தேவையுடைய பல மூதாளர்கள் படிவத்ததினை முழுமைப்படுத்ததி வழங்கிவிட்டு காத்திருக்கின்றார்கள். இவர்களை உள்வாங்க இல்லத்தின் மேல் தளவேலைகள் நடைபெற்று வருகின்றது.
இவ்வருடம் நடைபெறும் நிகழ்வு மூலம் கிடைக்கப்பெறும் நிதியும் இல்ல மேம்பாட்டிற்கே உபயோகப்படுத்தப்படும். தாயக உணர்வுடனும் தாயகச் சுவையுடனும் நடைபெறும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri