புதுக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழா
2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண பண்பாட்டு விழாவானது இன்றைய தினம் (16.12.2025) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
குறித்த விழாவானது பண்பாட்டு விழாவாகவும் பாரம்பரிய கண்காட்சியாகவும் அமைந்திருந்ததுடன் மூத்த கலைஞரும் எழுத்தாளருமான அரியான் பொய்கை செல்லத்துரையின் நினைவரங்காக விழா அரங்கு அமைந்திருந்தது.
நூல் வெளியீடு
தொடர்ந்து கலை நிகழ்வுகள், மூத்த மற்றும் இளங்கலைஞர்கள் விருது வழங்கிக் கௌரவித்தல், சிறந்த நூலாசிரியர்கள் கௌரவிப்பு முதலானவை இடம்பெற்றது.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் வெளியிடப்பட்ட 'வடந்தை' நூல் வெளியீடும் இடம்பெற்றது.
குறித்த விழாவில் பிரதம விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு பிரதி அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.



ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam