யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானிய கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.
யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானியாவின் சன்ரைஸ் அகடமி குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான சன்ரைஸ் அகடமி குழுவில், 15 வீராங்கணைகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவராகவே அமுருதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
?️ | GREWCOCK AND SURENKUMAR NAMED IN ENGLAND U19S TRAINING GROUP
— Sunrisers Cricket (@Sunriserscrick) December 22, 2023
Congratulations to Jodi Grewcock and Amu Surenkumar, who have both been selected in the England U19 preparation group ahead of a tour to Sri Lanka in March.
Full story ⬇️ #RiseUp??
பதினைந்து பேர் கொண்ட அணி
நீண்டகால விரிவான தேர்வு செயல்முறையின் அடிப்படையில், குளிர்கால பயிற்சி திட்டத்தில் இத்தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பேர் கொண்ட அணி பின்வருமாறு:
மோலி பார்பர்-ஸ்மித், ஒலிவியா பார்ன்ஸ், பிரிஷா பேடி, ஈவி புக்கர்,ஹன்னா டேவிஸ், மே டிரிங்கெல், இசபெல்லா ஜேம்ஸ், பெல்லா ஜான்சன்,லைலா , ஓலோரன்ஷா, சாரா பியர்சன், சார்லி பிலிப்ஸ், மாபெல் ரீட், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ரிவா பின்டோரியா, அமுருதா சுரேன்குமார்
அமுருதாவின் தந்தை சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர், யாழ்ப்பாண பிக் மட்ச் இல் அதிக தனி நபர் ஓட்டங்கள் (145) அடித்த சாதனை அவர்வசம் தான் இன்னமும் இருக்கிறது.
2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |