திருகோணமலை தேர்தல் தொகுதியை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
திருகோணமலை
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 02 ஆசனங்கள்
01. அருண் ஹெட்டியாராச்சி - 38,368
02. ரொஷான் அக்மீமன - 25,814
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 01 ஆசனம்
01.இம்ரான் மஹ்ரூப் - 22,779
இலங்கை தமிழரசு கட்சி - 01 (ITAK)
01.சண்முகம் குகதாசன் - 18,470
திருகோணமலை மாவட்ட இறுதி முடிவு
திருகோணமலை மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 87,031 வாக்குகளை திருகோணமலை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,2ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 53058 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 1 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 34168 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அம்மாவட்டத்தில் மொத்தம் 1 ஆசனங்களை அந்தக் கட்சி வெற்றிகொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 315,925 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை218,425
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 204,888
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 13,537ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 86,394 வாக்குளையும் 02 ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 68,681 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தையும் திருகோணமலை மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலை மாவட்டத்தில் 39,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலை மாவட்டத்தில் 3,775 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
திருகோணமலை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 25,479 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 18,461 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 11,191 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 1,518 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
சேருவில தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 27,702 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,581 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 5,543 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 662 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மூதூர் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 29433 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24145 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 8415 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 9,705 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 1,749 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 382வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.