பெப்ரவரி 22இல் ஆரம்பமாகும் வகுப்புக்கள் : கல்வி அமைச்சின் விசேட சுற்றறிக்கை
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்களை தொடங்கும் காலம் தொடர்பான அறிவிப்புக்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதல் முதலாம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கை
இது குறித்து, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினம் புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
அத்துடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குழந்தைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
