சர்ச்சைக்குள்ளாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தப்போவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பகிரப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதியிலிருந்து 3 வினாக்களை நீக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்திருந்தது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணி
எனினும் இந்த தீர்மானத்தினால், தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, பெற்றோர்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு பணியை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்ததை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்ட குழுவினால், பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியாகியிருந்ததை உறுதிப்படுத்தியுள்ளன.
இதற்கமைய பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணியை உடனடியாக ஆரம்பிக்க பரீட்சை திணைக்களம் தீர்மானித்துளளது.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
