இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு
முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிமுல்லை பிரதேசத்தில் படகு கவிழ்ந்ததில் நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனிமுல்லை, கம்சபா வீதியைச் சேர்ந்த நிலான் சதுரங்க என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சனிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.
களனிமுல்லை பகுதியில் கட்டடப்பொருட்கள் கடையொன்றினை நடத்தி வரும் இவர், அப்பகுதியில் சமூக சேவகராகவும், களனிமுல்லை இராணுவ முகாமில் சிவில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக தொண்டாற்றியுள்ளார்.

பிரேத பரிசோதனை
சம்பவத்தில் உயிரிழந்த நபர் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக படகில் பயணித்த போதே படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது, 8 வயது மகளை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு தந்தை கரை சேர்த்திருந்த நிலையில், தாயும் மரக்கிளையில் தொங்கியபடி கரைக்கு வந்துள்ளார். இதன்போது நீர்மட்டம் அதிகரித்து நிலான் சதுரங்க அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸ் கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை அழைத்து காணாமல்போனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று (13) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri