இலங்கை அணிக்கு நாளைய தினம் காத்திருக்கும் சவால்!
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தியாவில், அடுத்த ஆண்டு உலக கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக, இதுவரை இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் என 6 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த நிலையில் இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.

உலகக்கிண்ண விளையாட அந்த அணி
பல்லேகலேயில் நடந்த இரண்டாவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இதையடுத்து தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 5 புள்ளி கூடுதலாக பெற்ற ஆப்கானிஸ்தான், 115 புள்ளிகளுடன் 7வது இடத்தை கைப்பற்றியது.

இதன்மூலம் உலகக்கிண்ண (2023) பிரதான சுற்றில் விளையாட ஆப்கானிஸ்தான், அணி தகுதி பெற்றது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய கடைசி போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் பட்சத்தில் (67) புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பெறும். ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் (88 புள்ளி), அயர்லாந்து (68) அணிகள் முறையே 8, 9வது இடத்தில் உள்ளன. தென் ஆப்பிரிக்க அணி 11வது இடத்தில் உள்ளது.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri