பிரமுகர்கள் குழு நாட்டிலிருந்து வெளியேறும் தகவல்! கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை சோதனையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரமுகர்கள் குழுவொன்று நாட்டிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக கொழும்பில் ஐந்து விமானங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
| நாட்டைவிட்டு தப்பி ஓட திட்டமிடும் கோட்டாபய மற்றும் மகிந்த! தயார் நிலையில் 5 விமானங்கள்: இந்திய ஊடகம் தகவல்(Photos) |
இந்த நிலையில் கொழும்பு - ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்தன.
நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடும் என தெரிவிக்கப்பட்டும் நிலையில், ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்திருந்தன.
| ரத்மலான விமான நிலையம் சுற்றிவளைப்பு |
இதேவேளை திருகோணமலை கடற்படைத் தளத்தில் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் பதுங்கி இருக்கலாம் என தெரிவித்து கடற்படைத் தளத்திற்கு முன்னால் குழுமியுள்ள மக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan