ஊரடங்கு சட்டத்தின் போது தொழிலுக்கு செல்வோருக்கான முக்கிய தகவல்
பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோத்தர்கள் எவ்வாறு தொழில்களுக்கு செல்வது என்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இவ்வாறு அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தமது தொழிலுக்கு செல்ல நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை அலரி மாளிகை முன்பாக அரசாங்கத்திற்கு குறிப்பாக மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர், அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களுக்கு சென்று தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதனையடுத்து கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய விமான பயணச் சீட்டுகள் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், விமான நிலையத்திலிருந்து செல்பவர்களும் தமது கடவுச்சீட்டினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக உபயோகிக்க முடியும் என்றும், வெளிநாடு செல்பவர்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு செல்வோருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு (Photo) |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
