வெளிநாடு செல்வோருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு (Photo)
விமான நிலையத்திற்கு பிரவேசிக்கும் மற்றும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி தற்போது பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய விமான பயணச் சீட்டுகள் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
In viewing of the prevailing situation in Sri Lanka,passengers departing CMB can produce their air ticket & passport to the security personnel at checkpoints to reach @BIA_SriLanka Please be kind enough to arrive at the airport 03 hrs b4 your flight's scheduled time of departure
— SriLankan Airlines (@flysrilankan) May 9, 2022
அத்துடன், விமான நிலையத்திலிருந்து செல்பவர்களும் தமது கடவுச்சீட்டினை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக உபயோகிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாடு செல்பவர்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருகை தருமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Dear valued passenger,
— SriLankan Airlines (@flysrilankan) May 9, 2022
In viewing of the prevailing situation in Sri Lanka, passengers departing Colombo can produce their air ticket and passport to the security personnel at checkpoints to reach Bandaranaike International Airport.
Thank you
SriLankan Airlines
முதலாம் இணைப்பு
இலங்கையின் பல பகுதிகளில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தமது கடவுச்சீட்டு, பயணச்சீட்டை என்பவற்றை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இன்று காலை அலரி மாளிகைக்கு முன்பாக அரசாங்கம் மற்றம் மகிந்தவிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுத்து வந்தவர்களை தாக்கிய நிலையில் தொடர்ச்சியாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.