கோட்டாபயவுக்கான விட்டுக்கொடுப்பு தொடர்பில் சீதா வெளியிட்ட தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்குமாறு எந்தவொரு தரப்பினரும் தம்மைக் கோரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு எந்தவித தனிப்பட்ட தேவையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சீதா அரம்பேபொல விலகவுள்ளதாக வெளியான தகவல்கள் தொடர்பில் ஊடவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை வழங்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகல்
இது தொடர்பில் வினவியபோது, தமது சொந்த நலன் கருதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தால் அதற்கான வெற்றிடத்திற்கு நியமிக்கப்படுபவர் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக தன் மீது அழுத்தம் செலுத்துவதற்கான எந்த அவசியமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
