புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு! நடைமுறையில் புதிய மாற்றம்
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய நடைமுறையொன்று செயற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல நடவடிக்கைகளும் தற்போது தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய நடைமுறை
எனினும் இம்முறை பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும். கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.
பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.
பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.