தரம் 5 புலமைப்பரீட்சை தொடர்பில் வெளியானது அறிவிப்பு
தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார்கள்
தரம் 5 புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல், விநியோகித்தல் போன்றவற்றிற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைகளை தனி நபரோ அல்லது நிறுவனமோ மீறினால், அவர்கள் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார்கள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு அழைப்பதன் மூலம் முறைப்பாடுகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம்: 0112421111, பொலிஸ் அவசர பிரிவு: 119 , அவசர இலக்கம் (பரீட்சைகள் திணைக்களம்): 1911, பரீட்சை ஆணையாளர் நாயகம் அலுவலகம்: 0112785211, 011275212 , பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு கிளை - 0112784208 - 0112784537
