உயர்தரப் பரீட்சை தொடர்பில் அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சில் இன்று மாவட்ட செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சை சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு மாவட்டச் செயலாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு முக்கிய பணிப்புரை
பரீட்சைகள் ஆணையாளருக்கு மாத்திரம் பொறுப்புகள் வழங்கப்படக்கூடாது.கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உட்பட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களுடனும் ஒற்றுமையாகச் செயற்படுமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதில் தாமதத்தை எதிர்கொள்வார்கள். பல்வேறு சூழ்நிலைகளால் பரீட்சை ஏற்கனவே தாமதமாகி வருவதை எடுத்துக்காட்டுகின்றது.
பல சிரமங்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாகவும், கல்வித் துறையின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
