பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் முழுமையாக நிறைவுப் பெற்றுள்ளதாக உயர்க் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
உயர்க்கல்வி
இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 44 ஆயிரம் மாணவர்கள் தமது உயர்க்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
www.ugc.ac.lk இல், நுழைவு கட்-ஆஃப் மதிப்பெண்களைப் பார்க்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
