2021 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத புதிய ஆண்டு!பாலித தெவரப்பெரும
2021 ஆம் ஆண்டு மனிதர்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கையில்லாத புதிய ஆண்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. கொரோனா வைரஸை அரசாங்கத்தினால், இதுவரை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளது.
தினமும் 500 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், தினமும் சுமார் 5 பேர் இறந்து வருகின்றனர்.
பிறந்துள்ள 2021 ஆம் ஆண்டு மிகவும் நிச்சயமற்ற ஆண்டு.பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வு அரசாங்கத்திடம் இல்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வீதியில் இறங்கியது மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி.
எனினும் தற்போது துன்பத்தை தாங்கிக்கொள்ளாது பொதுமக்கள் வீதியில் இறங்க போகின்றனர் எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.