பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான அறிவித்தல் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 62.9 சதவீதமானவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை அதிபர்களுக்கான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கமைய பாடசாலை அதிபர்கள், தமது பாடசாலை மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இன்று(29) முதல் பரீட்சை திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 72,682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். இதற்கமைய 236,035 பாடசாலை பரீட்சார்த்திகளும், 36,647 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 149,946 பாடசாலை பரீட்சார்த்திகளும், 21,551 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 171,497 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam