இன்று வெளியாகவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய நாளுக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சைகளை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் ஜிஎல் பீரிஸ் அமைச்சரவையில் கொண்டு வந்த இது தொடர்பான யோசனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 10 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான பாடத்திட்டத்தை ஒரு வருடம்
9 மாதங்களாக மீளமைக்கும் யோசனையையும் அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam