இலங்கையில் 20000 ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்! கொழும்பு மக்கள் கூறும் விடயம்
பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என கொழும்பு வாழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டமை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நீண்ட நேர மின்வெட்டு தொடர்பில் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், 5000 ரூபா பணம் என்பது தற்போது மிகவும் சாதாரணமாக ஆகிவிட்டது. உணவுகளின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன.
பாண் உண்பதையே நாம் நிறுத்தி விட்டோம். முன்னதாக 20,000 ரூபாவிற்கு ஒன்றரை மாதத்திற்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
ஆனால் தற்போது 20,000 ரூபாவிற்கு பத்து நாட்களுக்கான உணவுப் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடிகிறது.
மாலை நேரங்களில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதால் மாணவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலை காணப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.