ஆடை ஏற்றுமதியில் ஐந்து மாதங்களில் 2000 மில்லியன் வருமானம்
இலங்கை 2025 இல் முதல் ஐந்து மாதங்களில் தைத்த ஆடை ஏற்றுமதி வருமானமாக 2,141.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் (2024) ஏற்றுமதி வருமானம் 1,961 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அதன்படி, இந்த ஆண்டின் (2025) முதல் ஐந்து மாதங்களில் தைத்த ஆடை ஏற்றுமதி வருமானம் முந்தைய ஆண்டின் (2024) முதல் ஐந்து மாதங்களுடன் ஒப்பிடும்போது 180.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா விதித்த 30 சதவீத வரி
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி வருமானம் 5.6 சதவீதம் அதிகரித்து 5350.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.
அதில் 2,141.7 மில்லியன் தைத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டது.
அமெரிக்கா விதித்த 30 சதவீத வரி, இலங்கையின் ஆடைப் பொருட்களின் ஏற்றுமதி வருமானத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 19 மணி நேரம் முன்

இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்கள்.. வெளியே கூறமுடியாத இஸ்ரேலின் மிகப் பெரிய இராணுவ இழப்பு News Lankasri
