மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 2000 கிலோகிராம் கோழி இறைச்சி எரித்து அழிப்பு
போதுமானளவு குளிர்பதன் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 2000 கிலோகிராம் கோழி இறைச்சி நேற்று எரித்து அழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
வடபகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய வாகனத்தினை ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அப்போது குறித்த வாகனத்தில் போதியளவு குளிரூட்டி வசதி இன்மையால் இறைச்சி பழுதடைந்த நிலையில் காணப்பட்டதையடுத்து அவற்றை கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இறைச்சி பாவனைக்கு உதவாது என வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் உறுதிபடுத்தப்பட்டதனையடுத்து சுகாதார பரிசோதகர்களால் நேற்று மாலை எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா தெற்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
