மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசு கவனம் செலுத்த வேண்டும்: திலகராஜா

Sri Lanka Upcountry People London Sri Lanka
By Sivaa Mayuri May 30, 2023 06:57 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report

இலங்கையில் மலையக மக்களின் 200 ஆண்டுக் கால வரலாற்றில் 150 ஆண்டு காலம், அந்த மக்கள் பிரித்தானியரின் ஆட்சியின் கீழேயே வைக்கப்பட்டிருந்தனர். எனவே மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ளுதல் வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷேரா ஹவுல்டனிடம், நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

நேற்றைய தினம் (29.05.2023) மாலை நுவரெலியாவில், பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தபோது மலையக மக்களின் கரிசனைகள் குறித்து அவர், கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசு கவனம் செலுத்த வேண்டும்: திலகராஜா | 200 Of Upcountry People In Sri Lanka

பிரித்தானியாவுக்கு உரியது

இதன்போது பகிர்ந்துக்கொண்ட விடயமாவது,1823களில் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வந்த காலத்தில் இருந்து 1972ஆம் ஆண்டு இலங்கைக் குடியரசாகும் வரை மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தினரின் தொழில் மற்றும் சமூக நிர்வாகத்தினை பிரித்தானியரே மேற்கொண்டனர்.

எனவே இன்று 200 வருட மலையக வரலாற்றில் பெரும்பங்கு பிரித்தானியாவுக்கு உரியது.

இந்த நிலையில், பல்வேறு உரிமை மறுக்கப்பட்டவர்களாக இலங்கையில் வாழும் இந்த மக்கள் குறித்த கரிசனையை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும்.

மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசு கவனம் செலுத்த வேண்டும்: திலகராஜா | 200 Of Upcountry People In Sri Lanka

பிரித்தானிய அரசு 

இந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஓர் குறைகேள் அதிகாரியை அல்லது குழுவை நியமிக்க வேண்டும். அதன் ஊடாகத் தொகுக்கப்படும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுமிடத்து, பல்வேறு உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு செல்லவும் தீர்வு பெறவும் வழியேற்படும்.

அத்துடன் பிரித்தானியரால் வழங்கப்பட்ட இலங்கைக் குடியுரிமையைப் பறித்த இலங்கை சுதேச அரசு, அதனை மீளவும் வழங்கும் போது வாக்களர் அந்தஸ்த்தினை மாத்திரம் வழங்கி உள்ளதே தவிர அவர்களை முழுமையான இலங்கைக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே இந்த மக்களை அர்த்தமுள்ள குடிமக்களாக ஏற்றுக் கொள்ளச் செய்யும் பொறுப்பையும், பிரித்தானிய அரசு ஏற்று, இலங்கை அரசுக்கு அது தொடர்பில் வலியுறுத்த வேண்டும் எனவும் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US