வவுனியாவில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞர் உயிரிழப்பு..!
வவுனியா - கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர், குறிசுட்டகுளம் - கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை முன்னெடுப்பு
குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளைஞரின் மரணம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன், விபத்துத் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam