கிடப்பில் போடப்பட்டுள்ள 20 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள்
கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட 20 ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்துள்ளார்.
உதுலாகம ஆணைக்குழு அறிக்கை, மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, லலித் அதுலத் முதலி படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, விஜயகுமாரதுங்க படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை, டென்சில் கொப்பேகடுவ படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விசாரணைக்குழு அறிக்கைகள் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வரிப்பணம்
போதுமான சாட்சியங்கள் இருந்தால் குறித்த விசாரணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் பிரதீபா மஹாநாம தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த ஆணைக்குழுக்களின் விசாரணை செயற்பாடுகளுக்காக கடந்த காலங்களில் இருநூறு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri