ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- உலக செய்திகள்(Video)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் 40பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் காபூலின் கைர்கானா பகுதியில் அமைந்துள்ள மசூதியில் ஒன்றில் நேற்று(17) இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசரகால தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்கள் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
