இடைநடுவில் தத்தளிக்கும் தமிழ் அகதிகள் - இலங்கை திருப்ப இணக்கம்
வியட்நாமில் அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அதிகளில் சிலர் நாடு திருப்ப இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட நிலையில் படகு பழுதடைந்ததில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளில் 20 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு தேவையான நிதி வசதிகளை அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு முன்னெடுத்து வருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வியட்நாமில் தற்போது 152 இலங்கை அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அன்றாட தேவைகளை ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு திரும்பி வர இணக்கம் தெரிவிக்காத 130 பேரும் , அகதிகளுக்கான சர்வதேச அமைப்பினூடாக மூன்றாம் தரப்பு நாடுகளிடம் தீர்வை கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
