'20' சாபக்கேடு: நாட்டுக்காக 21 ஐ ஆதரிக்க திகாம்பரம் அழைப்பு

Nuwara Eliya Parliament of Sri Lanka Sri Lanka Economic Crisis 21st Amendment
By Thirumal Jun 06, 2022 12:14 PM GMT
Report

"அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் தான் இந்த நாட்டுக்கு பெரும் சாபக்கேடாக அமைந்தது. எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்களைப் பகிரும் 21 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை நாம் ஆதரிப்போம்" என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நிலை 

" நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இன்று உச்சக்கட்டத்தில் உள்ளது. இந்நிலைமைக்கு ராஜபக்ச தரப்பே பொறுப்புக்கூற வேண்டும். ராஜபக்ச ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளால் தான் நாட்டுப் பொருளாதாரம் சீரழிந்துள்ளது.

எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் தீர்வில்லை. புதிய அரசு அமைந்த பிறகும்கூட வரிசைகள் தொடர்கின்றன. அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முழு ஆதரவையும் வழங்கும். எனினும், 21 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறுவது மொட்டுக் கட்சியின் கைகளில்தான் தங்கியுள்ளது. ஏனெனில் அக்கட்சிக்குத்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளது. 21 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறினால் தான் நாட்டில் ஜனநாயகம் மலரும்.

நிவாரணத்தில் அரசியல் நாடகம்

அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 19ஐ இல்லாதொழித்து 20 ஐ கொண்டு வந்தால் தான் நாட்டுக்குச் சாபம் ஏற்பட்டது. அதேவேளை, தமிழகத்தால் வழங்கப்பட்ட நிவாரணத்தில் அரசியல் நாடகம் அரங்கேற்றப்படக்கூடாது.

மக்களுக்கு நியாயமான முறையில் பங்கிடப்பட வேண்டும். சஜித் பிரேமதாச பிரதமர் ஆகி இருந்தால்கூட நான் அமைச்சுப் பதவியை ஏற்றிருக்கமாட்டேன். மக்கள் ஆணையுடன் அமையும் அரசியல்தான் அமைச்சுப் பதவியை ஏற்பேன்.

அதுவும் எமது மக்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் எமது மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கும் நிவாரணம் அவசியம். அதற்கான வலியுறுத்தல் தொடரும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US