தைவானுக்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா! அத்துமீறி நுழைந்து அதிரடி காட்டும் சீன போர் விமானங்கள்
தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தைவான் தெரிவித்துள்ளது.
இவற்றில் ட்ரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தைவானுக்கு ஆதரவாக களமிறங்கும் அமெரிக்கா
இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக களமிறங்கியுள்ளதுடன்,தைவானை சுற்றி சீனா போர் பயிற்சியை நடத்தியுள்ளது.
இந்நிலையில் தைவானின் வான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் இன்று மீண்டும் அறிவித்துள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 20 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தது என்றும் இதில் ட்ரோன்களும் அடங்கும் என்றும் தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
