இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் கண்டி, கட்டுகஸ்தோட்டை மற்றும் அலவத்துகொடை ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணி புரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடிய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் (Ministry of Defence) அண்மையில் தெரிவித்திருந்தார்.
உத்தியோகபூர்வமற்ற முறையில் இராணுவத்திலிருந்து விலகிய அல்லது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam