நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார் - தேடப்படும் நபர்களுக்கு கடுமையாகும் சட்டம்
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் சுமார் 20,000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நடமாடும் பொலிஸ் ரோந்துப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகன விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கை
இதற்கிடையில், இந்த பாதுகாப்பு சேவைக்கு கூடுதலாக, வாகன விபத்துகளை தடுப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் இரவும் பகலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு பாதுகாப்புப்படைகளும் ஆதரவளிக்கும் என்று இராணுவத்தளபதி லெப்டிணன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை,மதுபோதையில் வாகனம் செலுத்தும், சாரதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தேடப்படும் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைபடுத்தப்படுவார்கள் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த பாதுகாப்பு திட்டத்திற்கு பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்தும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri