முள்ளியவளையில் தங்கச்சங்கிலி அறுத்து தப்பி சென்ற இரு இளைஞர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் பெண்மணியின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அறுத்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பமானது நேற்றையதினம் (28.04.2026) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் முதலில் கடைக்கு வந்து தீப்பெட்டி வாங்கி விட்டு கடைக்குள் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு நின்ற பெண்மணியின் ஒரு பவுண் எடையுடைய தங்கச்சங்கிலியை அறுத்து கொண்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
கோரிக்கை
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்மணியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கமராவில் சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், அவர்களை இனங்கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan