நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களில் இரு இலங்கையர்கள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய வேளை கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்களில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்கள் 3 படகுகளுடன் இன்று (23) காலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் - இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட இந்த 22 கடற்றொழிலாளர்களில் இருவர் இலங்கையர் எனத் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இருந்து படகு வழியாகத் தமிழகத்துக்குத் தப்பிச் சென்று இராமேஸ்வரம் பகுதியில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் சுப்பிரமணியம் தீபன், சுப்பிரமணியம் சுதாகர் ஆகிய சகோதரர்களே இவ்வாறு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1997 ஆம் ஆண்டு போர் உச்சம் பெற்ற சமயம் இங்கிருந்து தப்பிச் சென்று அங்கு அகதிகள் முகாமில் வசிக்கும் இவர்கள் தினக் கூலிக்காக தமிழக கடற்றொழிலாளர்கள் படகில் பணியாற்றுகின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |